நமது TMAS மூத்த அடிதள உறுப்பினரும் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினர் ஹாஜி.Y. ஜமால் முகம்மது அவர்களின் சகோதரரும், ஜனாப்.அப்துல் கபூர், ஜனாப்.யூனுஸ் மற்றும் ஜனாப்.சிக்கந்தர் ஆகியோரின் மாமனாரும் நமது செயலாளர் ஜனாப்.Y.S செய்யது யூசுப்ஷா அவர்களின் தகப்பனாருமான ஹாஜி.Y.சாகுல் ஹமீது அவர்கள் இன்று(08-03-15) இரவு 8:10 மணியளவில் வஃபாத்தானார்கள். அன்னாரின் ஜனாஸா தொழுகை நாளை லுஹருக்கு பின் மஸ்ஜித் அப்துல் கபூரில் நடைபெறும் தொழுகைக்கு பின் ஜலான் பஹார் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர் மற்றும் ஜமாத்தார்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்
அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்.