ASSALAMU ALAIKUM rtb.,

Latest News

Latest News:Coming soon.

Friday, March 28, 2014

Appreciation from Jamiyah

Jamiyah Singapore had arranged Appreciation dinner on 28th March for participating and Contributing in "Maulidur Rasul 2014" held on 1st March 2014 @ Bedok Stadium.

On behalf of TMAS Vice-President Haji.A.Mohamed Iqbal, Janab.A.Sahabudeen(President,TMAS-Youth Wing) and E.M Shahul Hameed (Secretary,Youth Wing) had attended the function held at Jamiyah HQ.

Haji.Mohamed Iqbal (VP) recieved appreciation certificate for our TMAS from Guest of Honour.Alhaj.S.M.Abdul Jaleel (Chairman,MES Group of companies and Advisor to Maulidur Rasul)

Monday, March 17, 2014

TMAS-ன் “மலாக்காவிற்கு மகிழ் உலா” & குடும்ப தின விழா 2014”

இறைவனது மிகப்பெரிய கருணையால் நமது தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (சிங்கப்பூர்) இனிதே 66ஆம் ஆண்டு விழாவினை “மலாக்காவிற்கு மகிழ் உலா” & குடும்ப தின விழா 2014” என்று மிக கோலாகலமாக  வரலாற்று சிறப்பு மிக்க மலாக்கா மாநகரின் புனித பூலாவ் புசார் தீவில் கோலாலம்பூர், பொன்தியான், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் வாழும் நமதூர் அன்பர்களுடனும் சகோதர அமைப்புகளை சார்ந்த தோழர்களுடனும் இனிய குடும்ப தினமாக 16.03.14 அன்று கொண்டாடினோம்.

காலை 7:30 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட பேருந்து ஜோகூர் பாருவில் காலை சிற்றுண்டிக்கு பிறகு மதியம் 1:30 மணியளவில் மலாக்கா சென்றடைந்தது. ஃபெர்ரி (Ferry) மூலம் பூலாவ் புசார் சென்று அங்கு லுஹர் தொழுகைக்கு பின் அறுசுவை மதிய உணவு பரிமாரப்பட்டது.

பின்பு 3 மணியளவில் சங்க தலைவர் ஹாஜி.டாக்டர். கே.எம்.தீன் தலைமையில் தொடங்கிய பொது குழு இஸ்லாமிய பயானுடன் தொழில் மற்றும் நிதி (Business & Financial Talk) சம்மந்தமான கருத்தரங்கம் டிவி புகழ் சீனி ஜஃப்பார் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வுடன் அதிர்ஷ்ட குழுக்கல் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. துஆவுடன் முடிந்த பொது குழு பின்பு   ஷாப்பிங் (Shopping) இரவு சீஃபுட்(Seafood) என்று இனிதே நிறைவடைந்தது.


நிகழ்ச்சி சிறப்பாக அமைய உறுதுணையாக இருந்த நிர்வாகிகள் சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்கிய பொது மக்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். குறை நிறை இருப்பின் அல்லாஹுக்காக் பொருத்து மீண்டும் இது போன்ற சிறப்பானதொரு நிகழ்வில் நாம் அனைவரும் சந்திக்க எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக ஆமீன்
ஒறுங்கிணைவோம்!ஒன்று டுவோம்!

















Wednesday, March 12, 2014

மௌத் அறிவிப்பு

தோப்புத்துறை  ஹத்திப் தெரு மர்ஹூம்  ஜனாப்  அப்துல் மஜீத்  அவர்களுடைய  மகனும் ஜனாப் அஜீஸ் மற்றும் ஜனாப் ரசூல் ஆகியோரது சகோதரருமான ஜனாப். நத்தர் ஷா   அவர்கள் நேற்று 11/03/2014  இறைவனடி சேர்ந்துவிட்டார்கள் .

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னாரின் ஜனாஸா  இன்று காலை 09:30 மணிக்கு பெரிய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும் .

அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்.அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்

Monday, March 10, 2014

மௌத் அறிவிப்பு

தோப்புத்துறை குட்டையன் தெரு ஜனாப் P.S.நெய்னா முஷா அவர்களின் மனைவியும், நமது TMAS உறுப்பினர் ஜனாப் . PSN.ஹாஜா மெய்தீன் மற்றும் ஜனாப் .PSN.ஜமீல் அவர்களின் தாயாரும், TMAS இளையரணி உறுப்பினர் ஜனாப் .H.முகம்மது மகஜூன் அவர்களின் பாட்டியாருமான ஹபீபுகனி அவர்கள் இன்று மாலை 4:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
...
அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்
அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்

Thursday, March 6, 2014

மௌத் அறிவிப்பு


தோப்புத்துறை ஜனாப்.A.M.சுபஹானி அவர்களின் சம்மந்தியும் ஜனாப்.AMS.அனீஸ் அவர்களின் மாமனாருமான கரியாப்பட்டினம் ஜனாப்.S.கிருது முகைதீன் அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்னா அலைஹி ராஜிஊன்."

அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்
அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்

தகவல்: கரியாப்பட்டினம் ஜனாப்.S.சாகுல் ஹமீது (Upp Serangoon Rd)

Monday, March 3, 2014

Message from Jamiyah Singapore




மௌத் அறிவிப்பு

தோப்புத்துறை,, காயிதே மில்லத் நகர் மர்ஹூம்.முத்தலிப், ஜனாப்.முகம்மது உசேன், ஜனாப்.பாரக், ஜனாப்.சாகுல் ஹமீது, ஜனாப்.பஜ்ருதீன் மற்றும் ஜனாப்.அவுலியா முகம்மது ஆகியோரின் தாயாரான சாரா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்னா அலைஹி ராஜிஊன்."

அன்னாரின் மறைவால் துயரும் குடும்பத்தார்கள், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் TMAS சங்கம் ஆறுதல் கூறி எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக ஆமின்
அன்னாரின் மறுமைக்காக ஏக இறைவனிடம் துவா செய்வோமாக. ஆமின்

Saturday, March 1, 2014

Maulidur Rasul 2014

Maulidur Rasul 2014 organized by Jamiyah Singapore was held on 01.03.14 (sat) at Bedok Stadium.
Guest of Honour
Mdm.Halima Yacub
Speaker-Singapore Parliment
TMAS members and their family participated at the event.
ஜாமியா சிங்கப்பூர் சார்பில் மௌலிதூர் ரசூல் 2014 பிடோக் ஸ்டேடியத்தில் 01-03-14 சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஜனாபா.ஹலிமா யாகூப்(சிங்கப்பூர் நாடாளுமன்ற நாயகர்) கலந்து கொண்டார்கள்.
நமது TMAS சார்பில் சங்க உறுப்பினர்களும் குடும்பத்தாரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.