ASSALAMU ALAIKUM rtb.,

Latest News

Latest News:Coming soon.

Monday, March 17, 2014

TMAS-ன் “மலாக்காவிற்கு மகிழ் உலா” & குடும்ப தின விழா 2014”

இறைவனது மிகப்பெரிய கருணையால் நமது தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (சிங்கப்பூர்) இனிதே 66ஆம் ஆண்டு விழாவினை “மலாக்காவிற்கு மகிழ் உலா” & குடும்ப தின விழா 2014” என்று மிக கோலாகலமாக  வரலாற்று சிறப்பு மிக்க மலாக்கா மாநகரின் புனித பூலாவ் புசார் தீவில் கோலாலம்பூர், பொன்தியான், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் வாழும் நமதூர் அன்பர்களுடனும் சகோதர அமைப்புகளை சார்ந்த தோழர்களுடனும் இனிய குடும்ப தினமாக 16.03.14 அன்று கொண்டாடினோம்.

காலை 7:30 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட பேருந்து ஜோகூர் பாருவில் காலை சிற்றுண்டிக்கு பிறகு மதியம் 1:30 மணியளவில் மலாக்கா சென்றடைந்தது. ஃபெர்ரி (Ferry) மூலம் பூலாவ் புசார் சென்று அங்கு லுஹர் தொழுகைக்கு பின் அறுசுவை மதிய உணவு பரிமாரப்பட்டது.

பின்பு 3 மணியளவில் சங்க தலைவர் ஹாஜி.டாக்டர். கே.எம்.தீன் தலைமையில் தொடங்கிய பொது குழு இஸ்லாமிய பயானுடன் தொழில் மற்றும் நிதி (Business & Financial Talk) சம்மந்தமான கருத்தரங்கம் டிவி புகழ் சீனி ஜஃப்பார் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வுடன் அதிர்ஷ்ட குழுக்கல் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. துஆவுடன் முடிந்த பொது குழு பின்பு   ஷாப்பிங் (Shopping) இரவு சீஃபுட்(Seafood) என்று இனிதே நிறைவடைந்தது.


நிகழ்ச்சி சிறப்பாக அமைய உறுதுணையாக இருந்த நிர்வாகிகள் சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்கிய பொது மக்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். குறை நிறை இருப்பின் அல்லாஹுக்காக் பொருத்து மீண்டும் இது போன்ற சிறப்பானதொரு நிகழ்வில் நாம் அனைவரும் சந்திக்க எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக ஆமீன்
ஒறுங்கிணைவோம்!ஒன்று டுவோம்!