நிகழ்ச்சியில் சிறார்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி, ஆண்களுக்கு தமிழர்களின் வீர விளையாட்டான கயிறு இழுக்கும் போட்டி, பெண்களுக்கு மற்றும்குடும்பத்தார் அனைவருக்குமான இஸ்லாமிய வினா விடை போன்ற பல சுவாரசியமான போட்டிகள் நடந்தன.
டன் டோக் செங் மருத்துவமனை நுரையீரல் சிறப்பு நிபுணர் Dr. பசூலுதீன் அவர்களின் நுரையீரல் நோய் சம்மந்தமான மருத்துவ கருத்தரங்கமும்,
உஸ்தாத் ஹாஃபிஸ்.ஷேக் அலி பாக்கவி அவர்களின் மார்க்க உறையும் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.
சங்கத்தின் பொது கூட்டம் தலைவர் முனைவர் ஹாஜி.கே.எம்.தீன் அவர்களின் தலைமையில் நடந்தது. சங்க செயலாளர் ஜனாப்.ஒய்.எஸ்.செய்யது யூசுப்ஷாஅவர்களின் அறிக்கை உரையை தொடர்ந்து தலைவர் அவர்களின் உரை நிகழ்ந்தது. தாயகத்திலிருந்து சிங்கை வந்த விருந்தினர் கவுரவிக்கப்பட்டனர். 2016-2018 புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிப்பெற்றோர்க்கும் அதிர்ஷ்ட குலுக்கலும் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவாகவும் மனதிற்கு இதமாகமாகவும் இருந்தது TMAS குடும்ப தினம் 2016