ASSALAMU ALAIKUM rtb.,

Latest News

Latest News:Coming soon.

Monday, July 21, 2014

இந்திய முஸ்லிம் பேரவை (FIM) இஃப்தார் 2014

சிங்கப்பூரின் 16 இந்திய முஸ்லிம் சங்கங்களின் கூட்டமைப்பான இந்திய முஸ்லிம் பேரவை (Federation of Indian Muslims-FIM) மற்றும் மஸ்ஜித் பென்கூலன் இணைந்து நடத்திய இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சி 20.07.14 (ஞாயிறு) மாலை 6 மணியளவில் பென்கூலன் பள்ளி 3ஆம் தளத்தில் நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினராக மாண்புமிகு.மசகோஸ் ஜூல்கிஃப்லி (Masagos Zulkifli) அவர்கள் (மூத்த துணை அமைச்சர், உள்துறை மற்றும் வெளியுறவுதுறை அமைச்சு) கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சியில்சிங்கப்பூருக்கான இந்தியா தூதர் விஜய தாக்கூர் சிங் (Ms.Vijay Thakur Singh) உட்பட 15 நாடுகளின் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள், இந்திய முஸ்லிம் சங்கங்களின் நிர்வாகிகள், சிண்டா,ஜாமியா போன்ற சமய மற்றும் சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் என சுமார் 200 நபர்கள் கலந்து கொண்டார்கள்.

உஸ்தாத் கையூம் பாகவி அவர்களின் குரான் வசன ஓதலை தொடர்ந்து FIM மற்றும் ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்க (UIMA) தலைவரான ஹாஜி.ஃபரியுல்லாஹ் அவர்களின் தலைமையுறை நடந்தது. MES குழும நிர்வாக இயக்குனர் ஹாஜி.S.M. அப்துல் ஜலீல் அவர்கள் சிறப்பு விருந்தினரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். ஹாஜி.ஃபரியுல்லாஹ் அவர்கள் பாராட்டு சான்றிதழை வழங்கினார்கள். அதை தொடர்ந்து சிறப்பு விருந்தினரின் உரை நிகழ்ந்தது. நிகழ்ச்சியை TMAS தலைவரும் FIM துணை தலைவருமான ஹாஜி.Dr.K.M.தீன் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

சரியாக 7:18 மணியளவில் உஸ்தாத் கையூம் பாகவி அவர்களின் துவாவை தொடர்ந்து அனைவரும் நோன்பு திறந்தனர்.ஹாஜி.Dr.K.M.தீன் அவர்களின் நன்றியுறையுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.